தென் கொரியா சோல் மெற்றோபொலிடன் நகரின் பிரஜா உரிமை இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது …………………………………………………………………..
தென்கொரியாவிற்கான உத்தியோகத்தபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சோல் மெற்றப்பொலிற்றன் நகரின் கௌரவ பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.
சோல் மெற்றப்பொலிற்றன் நகராதிபதியின் வாசஸ்தலத்தில் நேன்று இடம்பெற்ற நிகழ்வின்போது இந்த கௌரவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
இலங்கையின் அபிவிருத்திக்காகவும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஜனாதிபதி காட்டும் அக்கறைகளைப் பாராட்டுவதாக சோல் நகர நகராதிபதி கூறினார். பிரஜா உரிமைக்கான பதக்கத்தையும் அவர் ஜனாதிபதிக்குச் சூட்டிவைத்தார்.