ஐ. நா சபையின் சிறப்பு குழு இன்று இலங்கை வருகை…
ஐக்கிய நாடுகள் சபையின் மூவரடங்கிய குழுவொன்று இன்றைய தினம்(04) இலங்கையை வந்தடையவுள்ளதாக, கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருப்பதாக கூறப்படுகின்ற, இரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் கைதுகள் தொடர்பில், குறித்த குழு ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்றும் ஆய்வுகளை மேற்கொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(04) நாட்டை வந்தடையவுள்ள இந்தக் குழுவினர் எதிர்வரும் 15ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக ஐ.நாவின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.