இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடியது ஏன்?
டெல்லியில் நடக்கும் இந்தியா – இலங்கை இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடையூறு ஏற்படுத்திய காற்று மாசுவை சமாளிக்க, இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடினர்.
கடந்த பல வாரங்களாக காற்று மாசு பிரச்சனையில் டெல்லி பாதிக்கப்பட்டுள்ளது.
பல இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடியபோதிலும், ஒரு கட்டத்தில் 10 இலங்கை வீரர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர்.
பந்துவீச்சாளர்கள் லஹிரு கமேஜ் மற்றும் சங்குங்கா லக்மாலும் மதிய வேளையில் களத்தை விட்டு சென்றனர்.
முதல் இன்னிங்ஸில் இந்திய ஏழு விக்கெட்டிற்கு 536 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணியின் கேப்டன் கோலி 243 ரன்கள் எடுத்தார்.
ஆறு இரட்டைச் சதங்கள் அடித்த முதல் சர்வதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார் கோலி.
காற்று மாசு குறித்து இலங்கை வீரர்கள் புகார் அளித்தனர். அத்துடன் மூன்று முறை போட்டி நிறுத்தப்பட்டது. இது கேப்டன் கோலி, இந்திய அணியின் இன்னிங்ஸை டிக்ளர் செய்ய வழிவகுத்தது.
ஒரு கட்டத்தில்,போட்டியை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு நடுவர்கள், மருத்துவர்களிடம் ஆலோசித்தனர்.
நடுவர்களிடம் பேசுவதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இலங்கை பயிற்சியாளர் நிக் போத்தாஸும் களத்திற்கு வந்தனர்.
தேநீர் இடைவேளை வரை, இலங்கை இரண்டு விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் எடுத்திருந்தது.
-BBC-