காலி கலுவேல்ல ‘த பேக்டரி அவுட்லெட்’ தீப்பற்றி எரிந்தது
காலி கலுவேல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ‘த பேக்டரி அவுட்லெட்’ என்ற கடையில் தீப்பிடித்து பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
கலுவேல்ல கீல்ஸ் இற்கு அருகில் காணப்படும் இந்த கட்டிடம் தீப்பிடித்தது காலையிலேயே அறியக் கிடைத்துள்ளது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீ அணைக்கபட்டுள்ளதுடன், A/C யில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாக அங்கிருக்கும் ஒருவர் இதுபற்றி எம்மிடம் தெரிவித்தார்.