• Sun. Oct 12th, 2025

இலங்கை மாணவிக்கு அவுஸ்திரேலியாவில் கௌரவிப்பு, பட்டம்…!

Byadmin

Dec 11, 2017

இலங்கை மாணவிக்கு அவுஸ்திரேலியாவில் கௌரவிப்பு, பட்டம்…!


காத்தாங்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் உமர்லெவ்வை காசிம் மற்றும்அபுல் ஹசன் சியானா தம்பதிகளின் மூத்த புதல்வியான பாத்திமாஸூஹாதா என்பவர் அவுஸ்திரேலியாவில் உள்ள தலைசிறந்தபல்கலைக்கழகங்களில் ஒன்றான Queensland பல்கலைக்கழகத்தில் இன்று(11.12.2017) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆறு வருட மருத்துவக் கற்கைநெறியை (MBBS) பூர்த்தி செய்தமைக்காக பட்டமளிக்கப்பட்டுகௌரவிக்கப்பட்டுள்ளார்.

இவர் காத்தாங்குடியை பிறப்பிடமாகக் கொண்டதுடன் ஆரம்பக்கல்விமற்றும் உயர் கல்வியை அவுஸ்திரேலியாவில் உள்ள Mansfield பாடசாலையில்பயின்று 2011இல் நடந்த உயர்தரப்பரீட்சையில் அப்பாடசாலையில் இருந்துமருத்துவக்கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு மாணவி இவர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற பரீட்சைகளில் இவர் சிறந்ததிறமைகளை வெளிக்காட்டி மூன்றுக்கும் மேற்பட்ட புலமைப்பரிசில்களைபெற்றுக்கொண்டதுடன் இறுதியாண்டு பரீட்சையிலும் அதிகூடிய  GPA மதிப்பெண்களுடன் சித்தியடைந்தமைக்காக இன்றைய நிகழ்வில் விசேடவிருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டு காத்தாங்குடி மண்ணுக்கும்இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் மருத்துவராக தனது ஓராண்டு உள்ளகப்பயிற்சியை எதிர்வரும் 15.01.2018 அவுஸ்திரேலியாவில் உள்ள வைத்தியசாலையொன்றில்ஆரம்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் மேலும் பல திறமைகளை வெளிப்படுத்தி மருத்துவத்துறையில்உயர்நிலை வரைசெல்ல வேண்டும் என நாமும் வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *