• Sat. Oct 11th, 2025

எப்படி நடந்துகொள்ள வேண்டும் என, இங்கிலாந்து வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் – மொயீன் அலி

Byadmin

Dec 12, 2017

எப்படி நடந்துகொள்ள வேண்டும் என, இங்கிலாந்து வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் – மொயீன் அலி


எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்கள் தெரிந்து கொண்டு, இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என மொயீன் அலி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுவரை முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் இருக்கிறது.
ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணி ‘மது’ என்ற சொல்லால் பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, பிரிஸ்டோல் இரவு கிளப்பில் வாலிபரை தாக்கிய சம்பத்தில் பென் ஸ்டோக்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி இரண்டு போட்டியில் இருந்து நீக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், ஆஷஸ் தொடரில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது.
அதன்பின் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அப்போது மதுபோதையில் ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப் உடன் தலையை வைத்து மோதியதாக பேர்ஸ்டோவ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த பிரச்சினையால் ஸ்லெட்ஜிங் தலைவிரித்தாடியது.
இந்நிலையில் பெர்த்தில் இங்கிலாந்து வீரர்கள் மது பாருக்குச் சென்றுள்ளனர். அப்போது சீனியர் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது பென் டக்கெட் என்ற வீரர் மதுவை ஊற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் டக்கெட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து வீரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘கிரிக்கெட் விளையாடும் இளம் வீரர்கள் இதை பார்த்துக் கொண்டிருப்பார்கள். மேலும், அனைத்து செய்திகளையும் அறிவார்கள். இதனால் நம்முடைய சிறந்த பழக்க வழக்கங்களை வெளிப்படுத்துவது முக்கியமானது.
போட்டிகளில் எப்படி உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக இளம் வீரர்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இதுபோன்ற தேவையில்லாத விஷயங்கள் அவர்ளை திசை திருப்ப வாய்ப்பாக அமைந்துவிடும்.
இங்கு ஏராளமான குடும்பங்கள் தற்போது உள்ளன. நாம் விளையாட்டின் மீதுதான் கவனம் செலுத்த வேண்டும். என்னை பொறுத்தவரையில், நான் இரவு விடுதிக்கு செல்வதை விரும்புவதில்லை. நாம் அனைவரும் வளர்ந்த மனிதர்கள். எப்படி நடந்த கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *