• Fri. Nov 28th, 2025

30 வயது ஆகிவிட்ட‍தா? அப்ப இதில் எல்லாம் இனி கவனமாக இருங்கள்!! ஆண்களுக்கு மட்டும்!

Byadmin

Nov 5, 2025

30 வயது ஆகிவிட்ட‍தா? அப்ப இதில் எல்லாம் இனி கவனமாக இருங்கள்!! ஆண்களுக்கு மட்டும்!


பெண்களுக்கும் ஆண்களுக்கும் உருவத்தில் மட்டுமல்ல வளர்சிதை மாற்றம் ஹார்மோன் சுரக்கும் தன்மையில் கூட வேறுபடுகிறது. இதனால்தான் சில நோய்கள் ஆண்பால் பெண்பால் என வேறுபட்டு வருகிறது.

பொதுவாக ஆண்களுக்கு பெண்களை விட மன அழுத்தம் அதிகம். இதற்கு காரணம் குடும்பச் சூழல் மற்றும் வேலை அழுத்தம். அதோடு வயதும் சில நோய்களுக்கு காரணமாகிறது. ஆண்களுக்கு உண்டாகும் சில வகை நோய்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
அல்சைமர் :
இந்த நோய் மனப் பிறழ்வை உண்டாக்கும். 60 வயதிற்கு பின் வரும் நோய் இது. நாளுக்கு நாள் ஞாபக மறதியைத் தரும்.சிலர் பல காலத்திற்கு பின்னோக்கி செல்வார்கள். அதே வருடத்தில் தாம் இருப்பதாக நினைத்து அப்போது நடந்தவற்றை பேசுவார்கள். இந்த நோய்க்கு அறிகுறிகள் தென்படாது. நோய் படிப்படியாக வருவதால் உணர்ந்து தக்க சமயத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

டெஸ்டோஸ்டெரான் குறைவு :
வயது அதிகமாகிக் கொண்டேயிருக்கும்போது பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரானும் குறையும். இதனால் செக்ஸில் நாட்டமின்மை, அதிகமாக உணர்ச்சிவசப்படுத்தல் என இருப்பார்கள். ஆனால் இவை குணப்படுத்தக் கூடிய பாதிப்புதான். மருத்துவரிடம் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதய நோய் :
ஆண்களைத் தாக்கும் மிக முக்கிய நோய்களில் இதுவும் ஒன்று. அதுவும் இன்றைய காலக்கட்டங்களில் 40 களில் இதய பிரச்சனைகள் ஆரம்பித்துவிடுகிறது. மன அழுத்தம், உடல் பருமன், கொழுப்பு மிக்க மசாலா உணவுகள் என பல காரணங்கள் உண்டு. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவற்றில் மாற்றங்கள் வந்தால் உடனே இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ப்ரோஸ்டேட் புற்று நோய் :
ஆண்களை அதிகம் தாக்கும் புற்று நோய்களில் புரோஸ்டேட் புற்று நோயும் ஒன்று. புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கம் மாறுபாடு வந்தால் சிறு நீர் கழிப்பதில் பிரச்சனைகள் உண்டாகும். வீக்கம் வலி ஆகியவை ஏற்படும். இந்த சமயத்திலேயே கவனித்தால் புற்று நோய் புரோஸ்டேட் சுரப்பியில் வராமல் தடுக்கலாம்.

சர்க்கரை வியாதி :
உலகளவில் இந்தியாவில்தான் ஆண்களுக்கு டைப்- 2 சர்க்கரை வியாதி தாக்குகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வியாதியால் டயாபடிக் ரெட்டினோபதி என்ற வியாதி அதிகம் வர வாய்ப்புகள் உள்ளன. இதனால் கண்பார்வையும் இழக்கக் கூடும்.வியாதியால் கால்கள் இழக்கும் அபாயமும் ஏற்படும். ஆகவே சர்க்கரை வியாதி வராமல் எச்சரிக்கையாக உங்கலை காத்திடவேண்டும்.

மன அழுத்தம் :
ஆண்களுக்கு உண்டாகும் இன்னொரு பெரிய பாதிப்பு மன அழுத்தம். மன அழுத்தத்தால் நிறைய பேர் தூக்கமின்மை, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதோடு மன அழுத்தத்தை குறைப்பதற்காக மது, புகை என அதற்கு அடிமையாவதால் கல்லீரல், நுரையீரல் பிரச்சனைகளுக்கும் ஆளாகிறார்கள். எப்போதும் பிரச்சனையே நினைக்காதீர்கள். யாருக்குதான் பிரச்சனைகள் இல்லை. மகிழ்ச்சியான நிலையை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *