ஈரான் நாட்டு கடற்படை வீரரை விரைந்து காப்பாற்றிய இலங்கை கடற்படை
சர்வதேச கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஈரான் நாட்டு கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் இருந்த வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட சுகயீனத்தை அடுத்து இலங்கை கடற்படை அவசர மருத்துவ உதவி வழங்கியுள்ளது.
குறித்த யுத்தக்கப்பலில் இருந்த வீரர் ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பி 4443 என்ற அதிவேக படகு மூலம் குறித்த வீரர் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த வீரர் மேலதிக சிகிச்சைகளுக்காக கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினர் இவ்வாறான அவசர மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.