• Mon. Oct 13th, 2025

தேர்தல் பிரச்சாரத்தில் இனவாதம் பேசினால் கடும் நடவடிக்கை. ( சமூக வலைகள், இணையதளங்கள், மேடைகள் உள்ளடங்கலாக)

Byadmin

Dec 20, 2017

தேர்தல் பிரச்சாரத்தில் இனவாதம் பேசினால் கடும் நடவடிக்கை. ( சமூக வலைகள், இணையதளங்கள், மேடைகள் உள்ளடங்கலாக)

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இனம், மதம்,மொழி ஆகியவற்றுக்கிடையில் பிரச்சினை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்தார்.

அத்துடன், தேர்தல் மேடைகளில் ஆற்றப் படும் உரைகளில் மாத்திரமல்லாது இணையதளம், சமூக வலைத்தளங்கள் உள்ளடங்கலாக செய்யப்படும் பிரசாரங்களும் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும்
பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித் துள்ளது.

எனவே அது தொடர்பான வர்த்த மானி அறிவித்தல் எதிர்வரும் டிசம்பர்
மாதம் 26 ஆம் திகதி வெளியிடப் படவுள்ளது.

எனினும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை குறித்து உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாக இருந்தால் தேர்தல் காலதாமதப்படுவதற்கு இடமுண்டு.

மேலும் நாடு முழுவதிலும் தேர்தல் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள தாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்கு ழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பி ரிய அவர் தெரிவித்தார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதைனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வேட்புமனு நிராகரிப்பு 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கா கன வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கை நேற்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் உள்ளூராட்சி மன்றங்கள் 93 இற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 14 ஆம் திகதி நண்பகலுடன் நிறை வுக்கு வந்தது. அதன்போது வேட் புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

உரிய சட் டக்காரணங்களை அடிப்படையாக் கொண்டே குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறித்த93 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 497 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. அதில் 23 வேட்பு மனுக் களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

வேட்புமனுக்களில் இடம்பெற் றுள்ளதவறுகளினாலேயே அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

இறுதி நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதனாலேயே அவ்வா றான தவறுகள் இடம்பெற்று விடு கின்றன. எனவே நேரகாலத்துடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முற்படுகின்ற வேளைகளில் அத்தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.

மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களில் சிறைவாசம் அனுபவித்தவர்கள், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுடன் சம்பந்தப்பட் டவர்கள், வயது குறைந்தவர்கள், நாட்டில் பிராஜயுரிமை இல்லாதவர்கள் உட்பட இன்னோரன்ன குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டவர்களின் பெயர்கள் வேட்புமனுவில் உள்ளடக் கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள் ளப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட் டப்படுகிறது.

எனினும் குறித்த காரணங்களை அடிப்படையாக்ககொண்டு வேட் புமனுக்களை நிராகரிக்கும் உரிமை சுயாதீன் தேர்தல்கள் ஆணைக்குழு விற்கு இல்லை. அனுமதியளிக்கப் பட்டவர் வேட்புமனுவை தாக்கல் செய்யாது வேறு நபர்கள் தாக்கல் செய்தல், குறித்த நேரத்திற்குள் தாக்கல் செய்யாமை, குறிப்பிட்ட அபேட்சகர்களின் எண்ணிக்கை இல்லாமை, உரிய பெண் பிரதிநிதித் துவம் இல்லாமை, கட்சியின் செய லாளர் மற்றும் சுயேட்சைக்குழுக் களின் தலைவர்களின் ஒப்பமின்மை, உரிய வகையில் உறுதிப்படுத்தப்ப டாமை, கட்டுப்பணம் செலுத்தாமை உள்ளிட்ட காரணங்களை அடிப்ப டையாகக்கொண்டே வேட்புமனுக் களை நிராகரிக்க முடியும்.

தேர்தல் பேரணி போன்ற செயற் பாடுகள் தற்போது இடம்பெறுவ தாகவும் குற்றச்சாட்டு முன்வைக் கப்படுகிறது. எனினும் தேர்தல் சட்டம் வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்திலிருந்தே அமுலுக்கு வரு கிறது. எனவே 93 உள்ளூராட்சி மன்றங்கள் தவிர்ந்த ஏனைய 248 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்புமனு தாக்கல் இன்று (நேற்று) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள் ளது.

ஆகவே நேற்றிலிருந்து தேர்தல் சட்டம் அமுலுக்கு வருகிறது. எனவே தேர்தல் சட்டதிட் டங்களை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலி
ஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட் டுள்ளது. அத்துடன் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பதாகைகளை அப்புறப் படுத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்காலத்தில் குறித்த பதாகைகளை அகற்றும் பணியினை முன்னெடுக் கப்போவதில்லை. மாறாக குறித்த பதாகைகளுக்கு மேல் மற்றுமோரு துண்டுப்பிரசுரம் ஒன்றை ஒட்டுவ தற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அத்துண்டுப் பிரசுரத்தில் “ஒட்டப் பட்டுள்ள பதாகையானது சட்டவி ரோதமாதனது தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் இது ஒட்டப்பட்டுள் ளது” எனக்குறிப்பிடப்படவுள்ளது.

மேலும் தேர்தல் பிரசாரம் தொடர்பிலானஸ்டிகர்கள் மற்றும் கொடிகளை வேட்பாளர்களின் வாகனங்களில் மாத்திரம் காட்சிப்படுத்த முடியும். ஆகவே குறித்த வேட்பாளர்கள் அல்லாது அவ்வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே செல்ல முடியும் . மேலும் தேர்தல் காலத்தில் பொது மக்களுக்கு பொருட்கள் பகிரப்படுகிறது.

வருட இறுதி செயற்பாட்டுக்கு அமைவாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டி பொருட்கள் எனக் கருதி அவை பகிர்ந்தளிக்கப்படுகின்றன. எனவே மக்களுக்கு வழங்கும் சலு கைகளை தடைசெய்யவும் முடியாது. ஆகவே அவ்வாறு பகிர்ந்தளிக்கப் படும் பொருட்களிலும் துண்டுப் பிரசுரம் ஒன்றை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

அத்துண்டுப்பிரசுரத்தில் “குறித்த பொருளானது பொதுமக்களிடமி ருந்து அறிவிடப்பட்ட நிதியிலிருந்து அரசாங்கத்தினால் வழங்கப்படுகி றது. மாறாக அரசியல்வாதிகளோ அல்லது சில குழுக்களிடமிருந்தோ பெறப்பட்ட நிதியல்ல” எனக் குறிப் பிடப்படவுள்ளது.

மேலும் அரச கட்டிடம் மற்றும் அபிவிருத்தித்திட்டங்களின் திறப்பு விழாக்களின்போதும் அவ்வாறான பதாகை ஒன்றை காட்சிப்படுத்துதவ தற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

அத்துடன் கட்சி கூட்டம் நடை பெறும் இடத்தில்தான் பதாகை ஒட் டுவதற்கு அனுமதியுள்ளது. தேர்தல் பிரசாரம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இனம், மதம்,மொழி ஆகிய வற்றுக்கிடையில் பிரச்சினை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தேர்தல் மேடைகளில் ஆற்றப்படும் உரைகளில் மாத்திரமல்லாது இணையதளம், சமூக வலைத்தளங்கள் உள் ளடங்கலாக செய்யப்படும் பிரசாரங் களும் கவனத்தில் கொள்ளப்படும்.

மேலும் பெண் வேட்பாளர்களை நிந்திக்கும் வகையில் மேற்கொள்ளப் படும் பிரசார நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் தேர்தல் காலத்தில் அரச நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் அரசியல் பேசுமிடத்து அதனை ஊடகங்கள் பிரசாரப்படுத்தாது தடுக்குமாறு ஊடக நிறுவனங்களைக் கேட்டுக்கொள்ளவுள்ளோம்.

தபால்மூல வாக்குகள் தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பத்திகதி எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே அவ்விண்ணப்பங்கள் எதிர்வரும் 22ஆம் திகதிற்கு முன்னர் கிடைக்கும் வகையில் விண்ணப்பதாரர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே விண்ணப்பங்களை நாளைக்கு (இன்று) பிறகு தபாலிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறானவர்கள் தமது விண்ணப்பங்களை அருகிலுள்ள தேர்தல் அலுவலகங்களில் ஒப்படைக்குமாறும் வேண்டிக்கொள்கிறோம்.

ஏனெனில் தபால் வாக்களிப்பு தொடர்பிலான அறிவித்தல் எதிர்வரும் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *