• Sun. Oct 12th, 2025

ஆண்களை காயப்படுத்தும் வார்த்தைகள் இவைதான்

Byadmin

Aug 9, 2025

நம் அன்புக்கு உரியவரிடம் பேசக் கூடிய பல வார்த்தைகள், அவர்களை எவ்வளவு பாதிக்கும் என்று யோசித்து பேசுவது மிகவும் அவசியம். அந்த வகையில், பெண்கள், ஆண்களை அதிகமாக காயப்படுத்தும் ஒருசில வார்த்தைகளை மட்டும் தவிர்க்க வேண்டும்.

பெண்கள் ஆண்களை காயப்படுத்தும் வார்த்தைகள் என்ன?
  • ஆண்கள், உன்னை அதிகமாக விரும்புகிறேன் என்று கூறும் போது, அதை ஏற்றுக் கொள்ளாமல், இல்லை அதெல்லாம் பொய் என்று மறுத்து, அவர்களின் அன்பான அந்த தருணத்தை வீணாக்காதீர்கள்.

 

  • ஆண்களின் சொந்த உறவுகள் செய்யும் செயல்களை சுட்டிக் காட்டி அவர்கள் மீது அதிக குறைகளை சொல்லக் கூடாது. ஏனெனில் அதனால் உங்கள் துணையின் நெருக்கம் குறைந்துவிடும்.

 

  • பெட் டைம் காதலின் போது, இன்றைக்கு வேண்டாம் என்று முகத்தில் அறைந்தது போல கூறாமல், அன்பாக ஒரு முத்தம் கொடுத்து இன்று ஓய்வு வேண்டும் என்று கூறுவது சிறந்தது.

 

  • ஆண்கள், பெண்களை எதிர்பார்ப்பதை விட, அவர்கள் மனதில் உள்ளதை நேரடியாக கேட்பதே சிறந்த ஒன்றாகும்.

 

  • சில நேரங்களில் அதிக வேலை காரணமாக பெண்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தால், அதற்காக அவர்களிடம் கோபம் கொள்ளாமல் அன்பாக புரிய வைப்பது நல்லது.

 

  • வீட்டிற்கு தேவையான பொருட்கள் இல்லை என்று எப்போதும் கணவனிடம் குறை கூறாமல், ஒரு மாதத்திற்கு தேவையானதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வ து சிறந்தது.

 

  • ஆண்கள் வேலை கிடைக்காமல் தேடிக் கொண்டிருக்கும் போது, எப்போ வேலை கிடைக்குறது என்று எதிர்மறையாக கூறாமல், கண்டிப்பாக வேலை கிடைத்து விடும் என்று நேர்மறையாக பேச வேண்டும்.

 

  • ஆண்கள் தவறு செய்தால் அதை கேட்கலாம். ஆனால் அதற்கு நீ எப்போதுமே இப்படி தான் என்று குத்திக்காட்டி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

 

  • தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை வைத்து, இவ்வளவு கஷ்டங்களும் உங்களால் தான் வந்தது என்று கூறாமல், அந்த தருணத்தில் மகிழ்ச்சியான வார்த்தைகளை பேசுவது நல்லது.

 

  • குடும்பத்தில் ஏதாவது விடயத்தால், விவாதம் எனில் கொச்சையான வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதனால் உங்கள் மீதான மரியாதை குறைந்துவிடும்.

 

  • திருமணத்திற்கு பின் தனது துணையிடம் உங்களை திருமணம் செய்ததற்கு, அவரை செய்திருக்கலாம் என்று ஒருபோதும் கூறக் கூடாது. ஏனெனில் அது ஆணின் தன்னம்பிக்கையை வேரோடு அழித்துவிடும்.

 

  • குழந்தைகள் வளர்ப்பில் அப்பாக்கள் எப்போது அம்மாக்களுக்கு அடுத்து தான் என்ற தோனியில் பேசக் கூடாது. இதனால் குடும்பத்தில் வீண் சச்சரவுகள் ஏற்படும்.

 

  • என்ன படம் பார்க்கலாம், எங்கு சாப்பிடலாம் என்று ஆண்கள் கேட்டும் போது, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். போன தடவை இப்படி கேட்டு ஒன்றும் நடக்கவில்லை என்று பேசுவதை தவிர்ப்பது நல்லது.

 

  • பெண்கள் செய்யும் வேலையை ஆண்கள் செய்ய முன் வரும் போது, நீங்கள் அதை செய்தால், சரியாக இருக்காது என்று புறக்கணிக்காமல், அவரின் அன்பை புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

  • ஆண்கள் மீசை, தாடி, புதிய சட்டை போன்ற விடயத்தில் புதிய ஸ்டைல் செய்தால், அதை பார்த்து என்ன டேஸ்ட் பிடிக்கவே இல்லை என்று கூறுவதை விட, இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறலாம்.

 

  • ஆண்களின் உண்மையான பலத்தை தெரிந்து அதை வைத்து பாராட்ட வேண்டும். அதற்கு பதிலாக நீங்கள் எப்போதும் உங்கள் அப்பா, அம்மா போல தானே என்று குறை சொல்லக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *