• Fri. Nov 28th, 2025

புற்றுநோயை அழிக்கும் சக்தியை கொண்ட இந்த பழம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?

Byadmin

Nov 8, 2025

(புற்றுநோயை அழிக்கும் சக்தியை கொண்ட இந்த பழம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?)

எப்போதும் கிடைக்கும் விலை மலிவான பழங்களில் ஒன்று கொய்யா. அதிலும், 4 ஆப்பிளுக்கு சமமான சத்து ஒரு கொய்யா பழத்தில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா..

உண்மை தான். நம்ம ஊர் பழங்களுக்கு நாம சரியான விளம்பரத்தைக் கொடுக்காமல் விட்டதன் எதிரொலிதான்.. பழங்களின் ராஜா என்ற பட்டத்தை ஆப்பிளுக்குக் கொடுத்து அதனை பாலிவுட் நட்சத்திரம் ரேஞ்சுக்கு வைத்து கடைகளில் விற்கப்படுவதற்குக் காரணம்.

மெழுகு பூசி, ஸ்டிக்கர் ஒட்டி வரும் ஆப்பிளுக்கு, நம்ம ஊர் சந்தைகளில் அடிபட்டு வரும் கொய்யா எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

கொய்யாவின் மகத்துவத்தைப் பார்க்கலாம்.
மழைக்காலத்தில் எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

பல்முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டைகளில் மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் குடல் புண் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு.

கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

விலை மலிவான கொய்யாவில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.
அதாவது, கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், கொய்யாப்பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, ஒரு பழத்தை அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்களும் ஈறுகளும் வலுவடையும். நல்ல மௌத் வாஷூம் கூட.. தமிழ்ல சொல்லணும்னா.. வாயை நல்லா க்ளீன் செய்யுங்க.. ஓ.. க்ளீன் இங்கிலீசா.. சரி இப்போ சொல்றேன் பாருங்க.. வாயை நல்லா சுத்தம் செய்யுங்க..
கொய்யாப்பழமானது செரிமான மண்டல உறுப்புகளைப் பலப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதை உண்பதால் வயிறு, குடல் இரைப்பை, கல்லீரல் மண்ணீரல், போன்றவை வலுப்பெறும். மேலும் இது மலக்கிருமிகளை கொல்லும் சக்தி கொண்டது.

இரத்த சோகை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

இவ்வளவு ஏங்க.. இந்த உலகமே பாத்து பயப்புடுற புற்றுநோயை தடுக்கும் சக்தி நம்ம கொய்யாவுக்கு இருக்குங்க.

கொய்யாப்பழத்தில் லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன. இவை புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொண்டவைன்னு அறிவியல் பூர்வமா நிரூபிக்கப்பட்டிருக்கு..
என்ன புரிஞ்சுதா.. நம்ம கொய்யாவின் மகிமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *