(உர விநியோகம் இன்று முதல் விநியோகம்)
உர பற்றாக்குறைக்கு தீர்வாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள 50 ஆயிரம் மெற்றிக் டொன் உரம் இன்று(08) முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கை உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த உரத் தொகை நாடாளாவிய ரீதியில் 200 பாரவூர்திகள் மூலம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ரொஷான் வடுகே தெரிவித்துள்ளார்.
50 ஆயிரம் மெற்றிக் டொன் உரத்துடன் ஓமான் நாட்டின் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.