• Mon. Oct 13th, 2025

குழந்தை இல்லாத ஆண்கள் இந்த மருத்துவ முறையை பின்பற்றினால் நிச்சயம் பலன் உண்டு..!

Byadmin

Jan 12, 2018

(குழந்தை இல்லாத ஆண்கள் இந்த மருத்துவ முறையை பின்பற்றினால் நிச்சயம் பலன் உண்டு..!)

உடல் உஷ்ணத்தால் பலரும் அவதிப் படுவதுண்டு, இதனால் வயிற்று வலி, முகப்பரு, எடை குறைதல், முடி உதிர்தல், தோல் வியாதிகள், போன்ற எரிச்சலூட்டும் பல பிரச்சனைகள் வருவதுண்டு.

பருவ நிலை மாற்றம், அதிக வெளி பயணங்கள், நாற்காலி, சோபாவில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதாலும் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் ஏற்படுகிறது.

இந்த உடல் உஷ்ணத்தை போக்கி, எண்ணற்ற பலன்களை பெற நாம் கொடுக்கும் எளிய சிறந்த இயற்கை முறை நிச்சயம் உங்களுக்கு பலன் அளிக்கும்.

பண்டை காலத்தில் குழந்தை இல்லாத ஆண்கள் இந்த மருத்துவ முறையை கையாண்டு பலன் அடைந்தனர், உடல் உஷ்ணத்துக்கு மட்டுமில்லாமல் குழந்தை இல்லாத ஆண்களுக்கும் இது சிறந்த பலனளிக்கும்.

தேவையான பொருட்கள்:

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

* ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு நல்லெண்ணெயை எடுத்து அதை மிதமாக சூடுபடுத்தவும்.

* மிதமாக சூடேறிய எண்ணெயில் தேவையான அளவு மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடங்கள் சூடாக்கி பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

* சூடு ஆறிய எண்ணையை இரு காலின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூச வேண்டும்.

* இரண்டு நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.

* இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

* மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் இதனை செய்து பயன்பெறலாம்.

குறிப்பு : இரண்டு நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது. சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *