• Sun. Oct 12th, 2025

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்

Byadmin

Jan 23, 2018

(அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்)

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம்இது. தேர்தல் களமும்

சூடுபிடித்திருக்கின்றது.இவ்வேளையில் வாக்காளர்களும்வேட்பாளர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்.

வழிகாட்டல்களை வழங்கும் தார்மிக கடப்பாடு எமக்கு உண்டு என நாம்நம்புகின்றோம். நாட்டைக் கட்டியெழுப்பும் மகத்தான பணிக்குவாக்குரிமையின் மூலம் பங்களிப்புச் செய்வதற்கான சந்தர்ப்பமாகவேதேர்தல்களை நோக்க வேண்டும் என்பதை ஆரம்பமாகவாக்காளர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
நமது தாய் நாட்டில் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர்அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நல்லாட்சிக்கானஅடித்தளத்தை இடுவதற்கும் இந்நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள ஓர்அரிய சந்தர்ப்பமாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலைக்குறிப்பிட்டால் அது மிகையாக மாட்டாது.
தேர்தலில் வாக்களித்தல் என்பது இஸ்லாமிய கண்ணோட்டத்தில்ஷபாஅத் எனும் சிபாரிசு செய்தலாகும்; வகாலத் எனும் பொறுப்புச்சாட்டலாகும் இவையனைத்துககும் மேலாக அது மார்க்கத்தில்ஷஹாதத் எனும் சாட்சி சொல்லலாகும். அது பொய் சாட்சியமாகஅமைந்து விடாமல் மெய் சாட்சியமாக அமைய வேண்டும் என்றவகையில் வாக்காளர்கள வாக்களிப்பில் பின்வரும் விடயங்களில்கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்:
ஏமாற்று மோசடிகளில் சம்பந்தப்படாத பாவமான முறைகளிலமுறைகேடான வழிகளில் பொருளடீடலில் ஈடுபடாத நன்னடத்தையும்நல்லொழுக்கமும் உடையவர்களுக்கே எமது வாக்குகள் அளிக்கப்படவேண்டும்.
நாட்டை நேசிக்கின்ற சமூகப்பற்றுளள ஊரைக் கட்டியெழுப்பும்உணர்வும் வல்லமையும் கொண்டவர்களாக எமது வாக்குகளைப்பெறுபவர்கள் இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொளள் வேண்டும்.
பதவிகளைப் பெறுவதற்கும் வருமானம் ஈட்டுவதற்குமான வழியாகஅரசியலைக் கருதாமல் அதனை ஓர் உயர் சமூகப் பணியாகக் கருதிசெயற்படுபவர்களாக எமது தெரிவுக்குரியவர்கள் அமைதல் வேண்டும்.
நாட்டுச் சட்டங்களை மீறுகின்ற வன்முறைகளில்  ஈடுபடுகின்றவேட்பாளர்கள் நிராகரிக்கப்படல் வேண்டும்.
இன மத வாதங்களைத் தூண்டும் வகையில் தமது தேர்தல் பிரசாரநடவடிக்கைகளை முன்னெடுப்போருக்கு வாக்குகள்அளிக்கப்படலாகாது.
மாற்று அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் தூஷிக்கின்றஅவமதித்துப் பேசுகின்ற பண்பாடற்ற வேட்பாளர்களும் எமதுதெரிவுக்குரியோர் அல்லர்.
சுருக்கமாகச் சொல்வதாயின எமது வாக்குகள் ஏக காலத்தில்நல்லவராகவும் வல்லவராகவும் விளங்குகின்ற வேட்பாளர்களுக்குவழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்திக் கொளளு;ம் கடப்பாடு நம்அனைவருக்கும் உண்டு.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக களமிறங்கியிருக்கின்ற கட்சிகளும்வேட்பாளர்களும் பின்வரும் வழிகாட்டல்களைப் பேணி நடக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றோம் எமது தாய் நாடான இலங்கைமண்ணில் நல்லாட்சி மலர வேண்டும் எல்லா சமூகங்களும்சமயத்தவர்களும் நல்லிணக்கத்தோடும் ஐக்கியமாகவும் வாழவேண்டும் நாடு சகல துறைகளிலும் வளர்ச்சி கண்டு முன்னேற்றப்பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே உங்களது எதிர்பார்ப்பாகஅமைதல் வேண்டும்.இந்த வகையில் நல்லாட்சிக்கான சிறந்தமுன்னுதாரண புருஷர்களாக நீங்கள் திகழ வேண்டும் என்பதே எமதுஎதிர்பார்ப்பு.
பதவி என்பது ஓர் அருள் மட்டுமல்ல அது மிகப் பெரும் அமானிதம்என்பதையும் நீங்கள் மனதிற்கொளள் வேண்டும். மேலும் உங்களதுதனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக அரசியல்வாழ்க்கையிலும் ஆன்மிக தார்மிக ஒழுக்கப் பண்பாடுகளைபேணுவதில் கரிசனையோடு இருத்தல் வேண்டும்.
எளிமை தியாகம அர்ப்பணம் முதலான மெச்சத்தக்க பண்புகளாலுமசெயற்பாடுகளாலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்துககு;ம் சாட்சிபகர்பவர்களாக முஸ்லிம் வேட்பாளர்களும் அரசியல் தலைமைகளும்விளங்க வேண்டும்.
நீதியைக் கடைபிடித்து நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொளவ்தோடு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடல வன்முறைகளில்ஈடுபடல மக்கள் மத்தியில் குரோதத்தையும் பகைமையையும்விதைத்தல் முதலான குற்றச்செயல்களில் ஈடுபடலாகாது.
எந்நிலையிலும் எமது நடவடிக்கைகள செயற்பாடுகள் தனிமனிதர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ அநீதி இழைக்கும் வகையில்அமைந்து விடாமல் இருப்பதை உத்தரவாதப்படுத்துவது அவசியமாகும்.
அவ்வாறே எமது சமூகத்தின் உரிமைகள் குறித்து பேசுகின்றபோதுசகோதர இனத்தவர்களின் உணர்வுகள் புண்படாத வகையில்நாகரிகமாகவும் இங்கிதமாகவும் பேசுவதும் செயற்படுவதும்முக்கியமானது.
இறுதியாக எல்லா நிலைகளிலும் நாம் அனைவரும் அல்லாஹ்வுக்குஅஞ்சி நடந்து கொளவாமாக! அவன் நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக!
அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளர்  
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *