(இலங்கை வீரர்கள் மேஜிக் பந்து வீச்சு… பங்களாதேஷ் 82 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது)
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முஷ்பிக்குர் ரஹ்மாணின் 26 ஓட்டங்களை தவிற மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 24 ஆவது ஓவரில் 82 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் பரிதாபமாக இழந்தது.
இலங்கை சார்பில் சுரங்க லக்மால் 3 விக்கட்டுக்களை எடுத்தார். இலங்கை அணி வெற்றி பெற 50 ஓவர்களில் 83 ஓட்டங்கள் பெற வேண்டி உள்ளது. பங்களாதேஷ் அந்நாட்டில் பெற்றுக்கொண்ட ஆகக்குறைந்த ஓட்ட எண்னிக்கையாக இது பதிவாகியுள்ளது.
பங்களாதேஷில் நடைபெறுகின்ற மூன்று அணிகளுக்கு இடையிலான 06 வது ஒருநாள் போட்டி இன்று டாக்கா நகரில் இடம்பெறுகின்றமை கூறத்தக்கது.