• Sat. Oct 11th, 2025

இதில் உங்கள் மாமியார் எந்த வகை?

Byadmin

Aug 30, 2025

(இதில் உங்கள் மாமியார் எந்த வகை?)

கணவரின் தாயால், நகரும் வாழ்வு, நரகமாகிறதா? மன நிறைவான மண வாழ்வு, நல்ல மனமுள்ள மாமியார் அமைந்தால் மட்டுமே! திருமண வாழ்வில், திருப்பத்தை உண்டாக்கும் மாமியார்களின் குணநலன்களை பற்றி பார்க்கலாம்.
1. பொறாமை குணம்
இவ்வகை தாய், தன் தங்க மகனுக்குத் திருமணம் முடிக்கையில், தன் மகனைத் தொலைப்பதாய் எண்ணி, மருமகளிடம் வருத்தம் கொள்கிறாள். இந்த வருத்தம் மகன் மீது கொண்ட அதீத அன்பால், இத்தனை வருடம் கொண்டபாசத்தால், பொறாமையாக மாறுகிறது. இதனால், வந்த மருமகள், தன் மகனுக்கு ஏற்றவள் இல்லையென எண்ணம் பெறுகிறாள்.
2. குறுக்கீடு குணம்
நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் குறுக்கிடுவதே இவரது வேலை. நீங்கள் செய்யும் சாதாரண விட்டு வேலை முதல் வீடு வாங்கும் விஷயம் வரை, இவரின் குறுக்கீடு இல்லாமல் நடக்காது. மருமகள் என்ற இடத்தை உங்களுக்கு அளிக்காது, ராஜாங்கம் நடத்துவார்.
3. சூழ்ச்சிக்கார மாமியார்
உணர்ச்சிப் பூர்வமாய் நடித்து, மகனை மிரட்டுவதில் ஆஸ்கார் விருது இவருக்கே. உங்கள் கணவர், வெளியே செல்லலாம், சினிமா செல்லலாம் என உங்கள் மீது தன்அன்பை வெளிப்படுத்த முயலும் போது, இந்த மாமியின் நாடகம் தொடங்கும். மனைவியா? இல்லை தாயா? என்ற தர்மசங்கடமான நிலையின் காரணகர்த்தா இவர் தான்.
4. உங்கள் சேவை எப்போதும் இவருக்கு தேவை...
எப்பொழுதும் குழப்பத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் ரகம். உங்ககளது கவனம், அன்பு என எல்லாம் எப்போதும் இவர் மீதே இருக்க வேண்டும் என எண்ணுவார். உங்கள் கைபேசியிலிருந்து புறப்படும் அழைப்பு இவருக்கே இருக்க வேண்டும்; நீங்கள் எல்லாவற்றையும் இவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், உற்ற தோழி போல் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இவரிடம் இருக்கும்.
உங்கள் அனைத்து விஷயத்திலும் இவர் மூக்கை நுளைப்பார். இவர் நல்லவரா? கெட்டவரா? என்ற புரியாத நிலையை உண்டாக்கும் மாமி இவர்.
5. ஆதரவான மாமியார்…
நீங்கள் எதிர்பார்த்த அம்மாவிற்கும் மேலான மனம் கொண்ட மாமி இவர். உங்களுக்கும், உங்கள் வீட்டாருக்கும் மரியாதை, அன்பு காட்டி, உங்களை தன் இல்லத்தோராய் நடத்தும் பண்பானவர். உங்களை மருமகளாய் காணாது, மகள் போல் நடத்தி, நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு அளவில்லா அன்பு காட்டும் அருமை உள்ளம் கொண்டவர்.
உங்களை குறை கூறாது, உங்கள் குறையையும் நிறையாய் காணும் குணம் கொண்டவர். உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் அமைந்து, சரியான துணையாய் இருப்பவர். இப்படி ஒரு மாமியார் கிடைத்திருந்தால், உங்களை விட அதிர்ஷ்டசாலி எவரும் இவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *