(தேர்தலின் பின்னர் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடையும் – மஹிந்த)
எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடையும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரையில் அரசாங்கம் காத்திருக்கின்றது. தேர்தலின் பின்னர் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடையும்.
இந்த தேர்தலின் போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அளித்த வாக்குறுதிகள் தொடர்பில் மக்கள் போதிய தெளிவுடன் இருக்கின்றார்கள்.
அரசாங்கம் என்ன சொன்னாலும் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் மக்கள் தீர்மானித்துள்ளனர் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.