(பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமானது)
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்ததான விசாரணைகளை நடத்திய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான நாடாளுமன்ற விவாதம், இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விவாதம், இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவடையவுள்ளதுடன், மேற்படி விவகாரம் தொடர்பான விவாதம், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர், இரண்டு தினங்கள் நடத்தப்படுமென, சபையில் அறிவிக்கப்பட்டது.