(கொழும்பினை அண்டிய சில பிரதேசங்களுக்கு 24 மணி நேர நீர் வெட்டு)
பராமரிப்பு நடவடிக்கை காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை(17) காலை 09:00 மணி முதல் ஞாயிறு(18) காலை 09:00 மணி வரையில் 24 மணி நேர காலம் கொழும்பினை அண்டிய பிரதேசங்கள் சிலவற்றிற்கு நீர் வழங்கல் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 1, 2, 3, 4, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வழங்கல் தடைப்படும் எனவும், கொழும்பு 12 மற்றும் 13 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அமுக்கத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.