• Sun. Oct 12th, 2025

ஒரு மாதம் பொறுத்திருங்கள் – மைத்திரி அறிவிப்பு

Byadmin

Feb 20, 2018

(ஒரு மாதம் பொறுத்திருங்கள் – மைத்திரி அறிவிப்பு)

எதிர்வரும் காலப்பகுதியில் அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அவசரப்பட்டு தீர்மானங்கள் எதனையும் எடுக்க வேண்டாம் என்றும், இன்னும் ஒரு மாதம் பொறுத்திருந்து பார்க்குமாறும் ஜனாதிபதி இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் பின்னர் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்குமாறும் அவர் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் தான் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றமும் அதில் ஒன்று என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *