(முடியுமானால் உங்கள் அல்லாஹ்வை காப்பாற்றச்சொல் ; சவால் விட்டு சென்ற கடும்போக்காளர்கள்)
அம்பாறை ஜும்மா பள்ளிவாசல் இனவாதிகளால் நேற்றிரவு தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு மக்களிடம் ஒரு சில பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தாக்குதல் தொடர்பாக அப்பிரதேச வாசியொருவர் கூறுகையில்
அவர்கள் இரண்டு பஸ்களில் வந்தனர்.அவர்கள் ஆரம்பத்தில் பள்ளிவாசலின் சுற்றுமதிலை தள்ளி உடைத்தார்கள். நாங்கள் பள்ளிவாசலில் தங்கிருந்தோம். பின்னர் அவர்கள் அங்கிருந்த வாகனங்கள் மீதும் எங்கள்மீதும் தக்கினார்கள். பின்னர் பள்ளிவாசலில் இருந்த சில குர்ஆண்களுக்கு தீ வைத்தார்கள்.
இறுதியில் முடியுமானால் உங்கள் அல்லாஹ்வை காப்பாற்றச்சொல் என்று சவால் விட்டு சென்றுவிட்டார்கள்..
மேலும் இப்பகுதியில் மூன்று முஸ்லிம் ஹோட்டல்கள்மீதும் அவர் தாக்கி நாசம் செய்துள்ளார்கள்.
இது தொடர்பாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விசாரணை மேட்கொண்டும் வருகின்றார்கள்.
இதில் அவர்கள் தாக்கும் போது #எங்கட மக்களின் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்கு உணவு போட்டா கொடுக்கின்றீர்கள் என்னு கூறிய நிலையில் அவர்கள் தாக்கியதாகவும் கூறினார்.
அம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதலின் சேதங்கள். ..
மூன்று உணவகம் ( ஹோட்டல் )
பள்ளிவாசலில் தரித்துவைக்கப்பட்ட வாகனங்கள். அம்பாறை பெரிய ஜும்மா பள்ளிவாசல். …
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
Varipathanchenai