(கோத்தாபயவினை கைது செய்ய 06வது முறையாகவும் இடைக்காலத் தடையுத்தரவு…)
முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் மார்ச் மாதம் 23ம் ஆம் திகதி வரை நீடிக்க இன்று(27) மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
பொது சொத்துகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோதாபயவினால் கடந்த நவம்பர் 28 இல் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று(27) ஆறாவது முறையாக மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
வீரகெட்டியவில் அமைக்கப்பட்டுள்ள கோதாபய ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க, ரூபா 3 கோடி அரசாங்க நிதி, முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.