(மஹிந்தாநந்தவிற்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணை 6 ஆம் திகதி ஆரம்பம்)
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே 39 லட்சம் ரூபாய் நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியமைக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேயரத்ன இன்று(27) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்கத்திற்கு சொந்தமான நிதியே இவ்வாறு முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தநந்த அளுத்கமகேவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.