(இயற்கையான முறையில் மூலநோயை முற்றாக குணமாக்கும் வாழைப்பூ..!)
நாம் வீட்டில் வளர்க்கும் வாழைமரத்தின் அனைத்து பாகங்களுமே நமக்கு பயன்படுகின்றது. அது மட்டுமின்றி இந்த வாழைக்கு சிறந்த மருத்துவ குணமும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், வாழைமரத்தின் அனைத்து பாகங்களும் ஏதோ ஒரு விதத்தில் எமக்கு பயன்படுவதைப் போன்று அவை அனைத்திலும் மருத்துவ குணங்களும் பொதிந்துள்ளன. அந்த வகையில் வாழைமரத்தில் உருவாகும் வாழைப்பூவின் மருத்துவ குணம் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்!
01. பெண்களுக்கு உகந்தது
கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்தபோக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தீர்வு காணலாம்.
02. கொழுப்பைக் கரைக்கும்
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். மேலும் இரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகள் கரைந்து இரத்தம் சுத்திகரிக்கப்படும்.
03. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது
இரத்தத்தில் உள்ள மேலதிகமான சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது.
04. வயிற்றுப்புண்கள் ஆறும்
இன்றைய உலகில் மனஉளைச்சலாலும் உணவு சரியான முறையில் சமிபாடடைவதில்லை. இதனால் சில சமயங்களில் வயிற்றுப்புண்கள் தோன்றும். இந்த புண்களை ஆற்ற வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண்கள் ஆறும்.
05. மூலநோயைத் தீர்க்கும்
மூலநோய் காரணமாக மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப்புண்கள் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப்பூவைப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி மலச்சிக்கல், சீதபேதி மற்றும் வாய்ப்புண் என்பவற்றையும் குணமாக்கும்.