(கெட்ட கொழுப்புகளை கரைத்து விரைவில் உடல் எடை குறைய தினமும் இதில் ஒரு டம்ளர் குடிங்க..!)
கிருமி நாசினியாக பயன்படும் எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
எனவே, எலுமிச்சைப் பழத்தை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, பின் அதை குளிரவைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதனுடைய முழுமையான சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
எலுமிச்சைப் பழம் வேகவைத்த தண்ணீரைக் குடிப்பதால்,
உடலின் மெட்டாலிசத்தை சீராக்கி, செரிமானம் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் நமது உடம்பின் pH அளவை சீராக்கும்.
தினமும் காலையில் இந்த எலுமிச்சை நீரைக் குடித்து வருவதால், நமது உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றி, உடலை எப்போதும் சுத்தமாக வைக்கிறது.
உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள், தொடர்ந்து காலையில் குடித்து வந்தால், அவர்களின் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைத்து, விரைவில் உடல் எடையைக் குறைக்கிறது
மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, எலுமிச்சை பழத்தினை வேகவைத்த நீரை ஒரு டம்ளர் குடித்தால் போதும். மன அழுத்தம் குறைந்து, மகிழ்ச்சியுடன் இருக்கலாம். இந்த தண்ணீர் ஆறியபின் மீண்டும் சூடாக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.
குளிர்ச்சியடைந்தபின்பும் கூட அந்த தண்ணீரை அப்படியே குடிக்கலாம்.-