(திகன அப்டேட்..)
நேற்றிரவு (04.03.2018) மெதமஹனுவர- மொரகஹமுல்ல பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையம் தீவைப்பு, மற்றும் அப்பிரதேசத்தால் வந்த வேன் ஒன்று தாக்கபட்டது, அத்துடன் உடிஸ்பத்துவ பகுதியில் கடை ஒன்று தீவைத்து சேதமாக்கபட்டது.
மேலும் இரவு ஏற்பட்ட மின்தடை சில மணி நேரத்தில் சீர் செய்யப்பட்டதாகவும், இரவு முழுதும் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் இருந்ததாகவும் மேலும் தெரிவித்தார். உயிரிழந்த நபரின் பூதவுடல் இன்று அப்பிரதேசத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. பிரதேசத்தில் இன்று சோக தினமாக ஆக்கப்பட்டு வியாபர ஸ்தாபனங்கள் மூடப்பட உள்ளது.