(அம்பிட்டிய சுமனரத்ன தேரரிடம் ஆசீர்வாதம் பெற்ற ஜனாதிபதி)
விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்குள்ள ஸ்ரீ மங்களாராம விகாரைக்கு சென்றதுடன் விகாராதிபதி தேரர் அம்பிட்டிய சுமனரத்ன அவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். அத்துடன் அவரின் உடல் நலத்தை பற்றியும் தெரிந்து கொண்டார்.
அதற்கு முன்தினம் மாலை மாமாங்கேஸ்வரம் ஆலயத்திற்கு ஜனாதிபதி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கறுப்புக்கொடி ஆர்பாட்டம் செய்தது பேசுபொருளான நிலையிலே இச்சந்திப்பு இடம்பெற்றது. -MN-