(தொடராக குனூத் ஓதி வருமாறு ஜம்இய்யத்துல் உலமா அவசர கோரிக்கை)
உலக நாடுகளில் குறிப்பாக சிரியாவில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் தாக்குதல்கள் முடிவுக்கு வரவும், நம் நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலை நீங்கி, சமாதான சூழல் நிலவவும் இன்று முதல் தொடராக ஒரு வாரத்துக்கு, தொழுகைகளில் குனூத் அந்-நாஸிலாவை ஓதி வருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)