“அரசாங்கம் இனவாதத்தை அடக்க வேண்டும்” – மஹிந்த
அமைதியாக இருந்து சமாதானத்தை நிலைநாட்டுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். கண்டி திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அசம்பாவிதங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது பாதுகாப்பு தரப்பின் கடமை அரசாங்கம் இனவாதத்தை அடக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.