• Sat. Oct 11th, 2025

நீங்கள் ஆசைப்பட்ட ஃபிட்டான தேகம் வேண்டுமா..?

Byadmin

Mar 15, 2018

(நீங்கள் ஆசைப்பட்ட ஃபிட்டான தேகம் வேண்டுமா..? )

இப்போதெல்லாம் யாரைப் பதர்த்தாலும் உடல் பருமன் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். ஏனெனில் இப்போதுள்ள உணவுப்ப ழக்கவழக்கம் அப்படி. சத்தான உணவுகளை உட்கொண்டு உடற்பருமன் அடைபவர்களை விட சத்தற்ற உணவு முறைகளால் உடல் உப்பிக் காணப்படுவர்களே அதிகம்.

அந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்காக நடை பயிற்சி செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று நடைபயிற்சி செய்பவர்கள் தான் அதிகம். உடல் எடை குறைந்து, ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது.

இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் கூட செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகளை வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர்.

ஐந்து நிமிடத்துக்கு சின்னதாக உங்கள் இடத்தைச் சுற்றி நடந்து வாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 20 நிமிடம் நடை பயிற்சி சென்றதன் பலனை நீங்கள் பெறலாம். தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்!

01. 20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடை போடுங்கள்.
02. 20 நிமிடத்துக்கு தோட்டத்தில் புல்வெட்டுதல் அல்லது செடி நடும் வேலை செய்யுங்கள்.
03. 30 நிமிடத்துக்கு வீட்டை சுத்தம் செய்யுங்கள்.
04. 10 நிமிடத்துக்கு ஓட்டப்பயிற்சி செய்யுங்கள்.
05. 09 நிமிடத்துக்கு ஸ்கிப்பிங் செய்யுங்கள்.
06. 20 நிமிடத்துக்கு நன்கு குனிந்து தரையைத் துடையுங்கள்.

அவ்வளவுதான்! நீங்கள் ஆசைப்பட்ட ஃபிட்டான தேகம் உருவாகி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *