(பங்களாதேஷ் வீரர்கள், அவர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையை சேதமாக்கியதாக குற்றச்சாட்டு)
இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (16) நடைபெற்ற இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆறாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்,
பங்களாதேஷ் வெற்றி பெற்றதை தொடர்ந்து பங்களாதேஷ் வீரர்கள், அவர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையை சேதமாக்கி உள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.
ஆர்.பிரேமதாச மைதானத்தில் பங்களாதேஷ் வீரர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையின் கண்ணாடியிலான கதவு முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது.
போட்டியின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற முறுகல் நிலையை அடுத்தே இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.