ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா தனது மாணவிகளை அறிவு திறன்களுடன் கூடிய சமூக மாற்ற முகவர்களாக உருவாக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது. இதன் மூலம் குடும்ப அலகு, சமூக மாற்றத்தில் பிரதான பங்கேற்பதுடன், நற்பண்புகள் சீரிய சமூக பொருளாதார அரசியல் சிந்தனைகளைக் கொண்ட தனிமனிதர்களையும் நற்பிரஜைகளையும் உருவாக்குவதில் முன்னின்று செயற்பட முடியுமாக இருக்கும்.
இலங்கையில் பெண்களுக்கான ஷரீஆக் கல்வியையும் தாய்மை அபிவிருத்திக்கான கற்கை நெறிகளையும் ஒருங்கே உள்ளடக்கிய மாதர் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு தீவிரமற்ற நடுநிலை போக்குடன் இயங்கும் முன்னோடி நிறுவனம் ஆஇஷா ஸித்திக்கா என்றால் மிகையாகது.
புதிய அனுமதி 2018
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து 2018-2022 காலப்பகுதி கற்கைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இது இஸ்லாமிய ஷரீஆ மற்றும் தாய்மை அபிவிருத்தித் துறையில் பட்டப்படிப்புக்கான கற்கையாகும் (HND).
விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள்
1- க.பொ. த (சா/த) பரீட்சைக்குத் தோற்றியிருத்தல்.
2- 01.05.2018 இல் 18 வயதிற்கு மேற்படாதவராயிருத்தல்.
3- சுகதேகியாக இருத்தல்.
விண்ணப்பிக்கும் விதம் :
விண்ணப்பப் படிவத்தை
1- ஜாமிஆ காரியாலயத்தில் அல்லது
2- சுய விலாசமிடப்பட்ட முத்திரை ஒட்டிய கடித உறை ஒன்றை ஜாமிஆ அலுவலக முகவரிக்கு (Jamiah Ayeshah Siddeeqah, P.O.Box: 14, Mawanella ) அனுப்புதல் மூலம் அல்லது
3- எமது இணையத் தளத்தில் (Website: www.siddeeqa.org) பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்படிவத்தை வாசித்து பிழையின்றி பூரணமாகவும் தெளிவாகவும் நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்தல். Jamiah Ayeshah Siddeeqah, P.O.Box: 14, Mawanella. அல்லது இணையத் தளத்தில் பதிவேற்றம் (upload) செய்யலாம்.