• Sat. Apr 4th, 2026

நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்! பரோலில் வருகிறார் சசிகலா!

Byadmin

Mar 19, 2018

(நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்! பரோலில் வருகிறார் சசிகலா!)

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் உடல் நிலை கவலைகிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்ட நடராஜனுக்கு சிறுநீரக தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்று, நடராஜனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *