• Sun. Oct 12th, 2025

2014இல் மாயமான மலேசிய விமானம் குறித்த புதிய தகவல்

Byadmin

Mar 20, 2018
(2014இல் மாயமான மலேசிய விமானம் குறித்த புதிய தகவல்)
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி புறப்பட்டு சென்றது. ஆனால் 2 மணி நேரத்தில் அந்த விமானம், ரேடாரில் இருந்து மாயமானது.
கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது. இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று பின்னர் கைவிடப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த 64 வயதாகும் மெக்கானிக்கல் இன்ஜினியரான பீட்டர் மக்மென் என்பவர் மலேசிய விமானத்தின் பாகங்களை கூகுள் எர்த் மூலம் கண்டுபிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விமானம் இருக்கும் இடம் மொரிஷியஷில் இருந்து 22.5 கிமீட்டர் தொலைவில் 16 கி.மீ தெற்கில் உள்ள ரவுண்ட் தீவை காட்டுகிறது. இந்தத் தீவில் இதுவரை விமானம் மாயமானது குறித்து தேடுதல் நடத்தப்படவில்லை. அதோடு, அமெரிக்கா அதிகாரிகள் சரியான தேடுதல் வேட்டையை நடத்தவில்லை, இந்த பகுதியில் தேடுதல் நடத்தவும் மறுக்கப்பட்டது.
தேடுதல் பணிக்கு அனுப்பட்ட அமெரிக்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. மாயமான விமானம் முற்றிலும் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது எனவும் திடுக்கிடும் தகவல் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அவரின் கணக்கு படி விமானம் புறப்பட்ட 6 மணி நேரத்திற்கு பிறகு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. #MissingMalaysianFlight 3MH370 #PeterMcMahon #tamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *