(ஸ்ரீ லங்கா சு.க மத்திய குழுக் கூட்டம் ஜனாதிபதித் தலைமையில் கூடுகிறது)
பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆராய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த வாரம் இடம்பெறும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஜனாதிபதியுடன் கலந்துரையாடி பிரதமர் விவகாரத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும், பிரேரணையில் கைச்சாத்திடுவது குறித்து தனித்து தீர்மானம் எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்துள்ள நிலையில் எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி குறித்த பிரேரணை வாக்கெடுப்பிற்கு பாராளுமன்றில் விடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.