(பேருவளை பத்தெகட ; பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றத்தில் மூவர் கைது !)
பேருவளை பத்தெகட பிரதேசத்தில் வைத்து வாலான மோசடி ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீடு ஒன்றில் சட்டவிரோத சிகரட் உள்ளிட்ட போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்றுமுன் தினம் அங்கு சென்ற வாலான மோசடி ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேருவளை ஆளும் தரப்பு அரசியல் பிரமுகர் ஒருவரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது.