• Fri. Nov 28th, 2025

தினமும் ‘மாம்பழம்’ சாப்பிட்டால் இந்த 6 நோய்கள் நம்மை அண்டாது!

Byadmin

Mar 27, 2018

(தினமும் ‘மாம்பழம்’ சாப்பிட்டால் இந்த 6 நோய்கள் நம்மை அண்டாது!)

மாம்பழம் ஒரு இயற்கையின் வரப்பிரசாதம், மாங்கனியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஏற்படும் 6 வித உபாதைகளிலில் இருந்து விடுபடலாம்.

மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன.

இந்திய வேதங்களில் ‘மா’ பற்றிய குறிப்புகள் அதை கடவுள்களின் உணவாகக் குறிக்கின்றன. ‘மேங்கோ’ (Mango) என்ற ஆங்கிலப் பெயர் ‘மாங்காய்’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தழுவி உருவானதாக கருதப்படுகிறது.

மேலும் மாம்பழம் பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்று என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

‘மாம்பழம்’ – ‘ஞானப்பழம்’ இது தமிழரின் பாரம்பரியத்தில் மிக முக்கியமானது.

மாங்கனியில் உள்ள மருத்துவ சிறப்பம்சங்களை இனி பார்க்கலாம்…

மனிதனின் ஆரோக்கிய வாழ்வில் மாம்பழத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

பொதுவாக நமது தோட்டங்களில் விளையும் மாம்பழங்களை சாப்பிடுவது மிகுந்த நன்மையை தரும்.

ரசாயண மருந்துகளால் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் நமது உடலுக்கு கேடுகளை விளைவிக்கும்.

மாம்பழத்தில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினந்தோறும் மாம்பழம் சாப்பிட்டு வருவது உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, சில உடல் உபாதைகளில் இருந்தும் விடுதலை தருகின்றது.

6 வகையான நோய்களிலிருந்து விடுபட மாம்பழம் ஒரு உற்ற நண்பன்…

* புற்றுநோய் போராளி

புற்றுநோய் ஒரு உயிர்க்கொல்லி நோய். உடல் உறுப்புகளை படிப்படியாக நாசம் செய்து உயிருக்கு உலை வைக்கும் கொடிய நோய்.

மாம்பழத்தில் உள்ள ‘பாலிபினோலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்’ (polyphenol antioxidant) புற்றுநோயை தடுக்கவல்லமை பெற்றது.

* கொழுப்பு எரிப்பான்

மாம்பழம் கொழுப்பை கட்டுப்படுத்தும் வித்தகனாக திகழ்கிறது.

நார்ச்சத்துகள், பெக்டின், விட்டமின் சி ஆகியவை அதிகமாக கொண்டுள்ள மாங்கனி 90% வரை கொழுப்பை குறைக்க வழிவகை செய்கிறது.

* ரத்த அழுத்த நிவாரணி

மாம்பழத்தில் உள்ள மக்னீஷியம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

* ஆஸ்துமா தடையாளன்

மாம்பழத்திலுள்ள பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சி ஆகியவை ஆஸ்துமா வருகின்ற அறிகுறி தெரிந்தாலே முட்டுக்கட்டை போட்டு வந்த வழியே விரட்டி விடும்.

* பார்வைக்கு ஒளியூட்டி

மாம்பழத்தில் உள்ள விட்டமின் எ பார்வை குறைபாடுகளை நீக்கி தெளிவான பார்வையை ஊட்டுகிறது.

* இரத்தசோகை அண்டவிடாதவன்

இரும்பு சக்தியை கொண்டுள்ள மாம்பழம் இரத்த சோகையை தவிடு பொடியாக்கிவிடும் சிறப்பம்சம் கொண்டது.

தினமும் தவராமல் இரண்டோ, மூன்றோ மாம்பழங்களை சாப்பிட்டு வருவது ஆரோக்கியத்துக்கு மேன்மையூட்டும்.

”கோடை தொடங்கும் பருவ காலத்தில் தாராளம் கிடைக்குமாம் மாம்பழம். அதை அனைவரும் உண்டு ஆரோக்கியம் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *