(ஐக்கிய தேசிய முன்னணி கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை)
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நடைபெற்ற நேற்றைய கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் வைத்து பேசப்பட்டது.
எனினும் இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பதை, பிரேரணை முன்வைக்கப்படும் தினத்திலேயே முடிவு செய்யப்படும் என்று பங்காளி கட்சிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்த கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பில் வைத்து, தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாதுள்ளமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கடுமையான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாக, அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் சூரியன் செய்தி சேவைக்கு தெரிவித்தார்.