(ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, மகிந்தவிடம் வீழ்ந்தது)
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் புதிய மேயராக மதுர விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மதுர விதானகேவுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. புதிய மேயர் தெரிவுக்காக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திம நயனஜித்துக்கு 11 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரேமலால் அதுகோரள பிரதி மேயராகவும் தெரிவிசெய்யப்பட்டுள்ளார்.