• Sat. Apr 4th, 2026

மாற்றுத்திறனாளி கணவனை முதுகில் தூக்கிச் சென்ற மனைவி

Byadmin

Apr 4, 2018

(மாற்றுத்திறனாளி கணவனை முதுகில் தூக்கிச் சென்ற மனைவி)

இந்தியா, உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த பிம்லா என்ற பெண்ணின் கணவர் சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் ஒரு காலை இழந்தார். இதனால் அவருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பிம்லா சென்றார்.

புகைப்படம் எடுப்பதற்காக பிம்லாவின் கணவர் வர வேண்டும் என்று கூறி விட்டனர். இதையடுத்து தனது கணவரை முதுகில் சுமந்து வீட்டிலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான வாகனம் இல்லாததால் நடந்து சென்றதாக பிம்லா தெரிவித்தார். சான்றிதழ் வாங்குவது மிகவும் அவசியம் என்பதால் அவரை முதுகில் தூக்கி வந்ததாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *