(மேத்தியூஸ் குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் கிரஹாம் லெப்ரோய் விசேட கருத்து)
இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 போட்டிகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏஞ்சலோ மேத்தியூஸ் இனி பந்து வீச மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக் குழு தலைவர் கிரஹாம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.
மேத்தியூஸ் தொடர்ந்து தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்து வருகின்றார். இதனால் முக்கிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு தவறவிடப்படுகிறது.
இதனை காரணமாகக் கொண்டு அவர் இனிவரும் போட்டிகளில் பந்துவீச மாட்டார் எனவும், மேத்தியூஸ் முழு நேர துடுப்பாட்ட வீரராக செயற்படுவார் எனவும் கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.