(புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேரூந்து சேவைகள் இன்று(10) முதல்)
தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நடைமுறைப்படுத்தவுள்ள விசேட பேரூந்து சேவையானது, மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இன்று(10) முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம, கடுவெல, பிலியந்தல பேரூந்து தரிப்பிடங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை, பாணந்துறை, மத்துகம, அளுத்கம ஆகிய பேரூந்து தரிப்பிடங்களை மையமாகக் கொண்டு தூர பயணத்திற்கான பேரூந்துகள் சேவைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் கடவத்தை, கட்டுநாயக்க, நிட்டம்புவ பேரூந்து தரிப்பிடங்களை மையமாகக் கொண்டும் விசேட பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதுதவிர 40 இற்கும் மேற்பட்ட பயணிகள் ஒன்று சேர்ந்து பேரூந்து ஒன்றினை ஒதுக்கி பயணிகள் தேவையினை பூர்த்தி செய்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகும், குறித்த முறையில் பேரூந்தினை பெற்றுக் கொள்ள 011 282 5948 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.