(தெஹிவளை தேசிய மிருகக் காட்சிசாலை மூன்று இரவுகளுக்கு மூடப்படும்)
தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு எதிர்வரும் 12,13 மற்றும் 14 ஆகிய தினங்களில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை இரவு நேரங்களில் மூன்று நாட்களுக்கு மூட தீர்மானித்துள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த தினங்களில் காலை 08.30 முதல் மாலை 06.00 மணி வரை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.