(ஐ.தே.கட்சியானது இம்முறை மே தினப் பேரணியினை தவிர்க்க தீர்மானம்)
ஐக்கிய தேசியக் கட்சியானது இம்முறை மே தினப் பேரணி எதனையும் முன்னெடுக்காது மே தினக் கூட்டமொன்றை மட்டும் நடத்துவதென தீர்மானித்துள்ளது.
மே தினக் கூட்டமொன்றை மட்டும் நடத்துவதெனவும், பேரணிகளை நடத்துவதில்லை எனவும் கட்சி தீர்மானித்துள்ளது. இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 07ம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தின் போது மேற்குறித்த இந்த விடயம் பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.