• Tue. Oct 14th, 2025

வீதியில் சுற்றித்திரிந்த, வினோத மிருகம் – பொது மக்கள் அச்சம்

Byadmin

Apr 18, 2018

(வீதியில் சுற்றித்திரிந்த, வினோத மிருகம் – பொது மக்கள் அச்சம்)

ஒரு விசித்திரமான மிருகம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வினோத விலங்கு  பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் இருந்து உள்ளது.  இந்த மிருகம்  கேமராவில் பிடிபடுவதற்கு முன்னதாக இரண்டு நாய்களைக் கொன்றதாக கூறப்படுகிறது.
அர்ஜென்டினாவின் சாண்டா பெ நகரின் தெருவில்  நடந்து செல்லும்  இந்த மிருகம் ஜெர்மன் ஜெப்பர்ட் நாய் போலவும்,  ஒட்டகத்தை போன்ற  நீண்ட கழுத்துடனும்  சிறிய தலையுடனும் இருந்து உள்ளது.
சமூக வலைதளத்தில்  2005 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு உயிரினத்தை சந்தித்ததாக ஒரு நபர் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னொருவர் லத்தீன் காட்டுப்பகுதியில்  இருக்கும் சுபாக்காப்ரா என அறியப்பட்ட உயிரினத்தைப் போன்ற ஒரு வாம்பயர் என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *