• Tue. Oct 14th, 2025

நான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால், சிறுமி ஆசிபாவை கொன்றவர்களை சுட்டு தள்ளியிருப்பேன்

Byadmin

Apr 19, 2018

(நான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால், சிறுமி ஆசிபாவை கொன்றவர்களை சுட்டு தள்ளியிருப்பேன்)

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா  ஒரு வாரமாக அடைத்து வைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால் காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் தொடர்புடையவர்களை சுட்டு தள்ளியிருப்பேன் என்று சரத்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து சரத்குமார் புதுக்கோட்டையில் கூறுகையில் பாலியல் குற்றங்களுக்கு சவுதியில் வழங்குவதைப் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தப்பு செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதே பயம் வரும்.

நான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால் சிறுமியை கொலை செய்தவர்களை சுட்டு தள்ளியிருப்பேன் என்றார் சரத்குமார்.

காஷ்மீர் சிறுமி ஆசிபா கொலையாகி அந்த விடயம் 3 மாதங்கள்  கழித்தே   வெளியே வந்ததும் மோடியின் அரசு குற்றவாளிகளை காப்பாற்ற முயன்று அசிங்கப் பட்டதும் உலகறிந்ததது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *