(விமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்தலாம் – இந்திய தொலைதொடர்பு ஆணையம்)
விமான பயணத்தின்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. அதனை மாற்றியமைத்து விமான பயணத்தில் செல்போன் மற்றும் இண்டர்நெட் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என டிராய் அமைப்பு மத்திய தொலை தொடர்பு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதனை ஏற்றுக்கொண்ட தொலை தொடர்பு ஆணையம், இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணத்தின் போது செல்போன் பயன்படுத்த இன்று அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TelecomCommission #flightmobileservices