(நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதில் ஹெல உறுமய எதிர்ப்பு)
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியானது இது தொடர்பில் நிரந்தரமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லையென குறித்த கட்சியின் ஊடகச் செயலாளர் துசார திசாநாயக்க இன்று(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு முயற்சி எடுத்தால், அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும், இது தொடர்பில் பிவிதுரு ஹெல உறுமய கட்சிக் கூட்டத்தில் தமது கட்சியின் உறுதியான நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.