• Sun. Oct 12th, 2025

உலமாக்கள் தமது பயான்களை சிங்கள மொழியில் நிகழ்த்த வேண்டும்

Byadmin

Apr 23, 2018

(உலமாக்கள் தமது பயான்களை சிங்கள மொழியில் நிகழ்த்த வேண்டும்)

எமது நாட்டில் இஸ்லாம் பற்றிய தெளிவின்மையால்தான் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே உலமாக்கள் மாற்றுமதத்தவர்களுக்கு விளங்கும் மொழிகளில் தங்களது பயான்களை கட்டாயமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என அல் – குர்ஆன், சுன்னாகற்கைக்கான இளவரசர் ஹாமித் பின் அப்துல் அஸீஸ் அல் – சவூத்தின் தாயார் சங்க பொது அலுவலகத்தின் மேற்பார்வையாளரான முஹம்மத் றியால் அஸ்ஸெய்லானி (சாதிக் ஹாஜியார்)  தெரிவித்தார்.

நவமணிப் பத்திரிகை ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனத்துடன் இணைந்து 05 ஆவது முறையாக நடாத்திய ரமழான் பரிசு மழை 2017 இன்பரிசளிப்பு நிகழ்வு கடந்த (19) வியாழக்கிழமை ஜம்மியத்துஷ் – ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றவேளை அதில் கௌரவ அதிதியாகக்கலந்து கொண்டு பேசுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரமழான் பரிசுமழையில் 1ஆம் பரிசன உம்ரா பயணத்தை ஹன்தெஸ்ஸ – சனீஹா காசிம் பெற்றுக் கொண்டார். இப்பயணத்தை ஒருமஹ்ரமி இல்லாமல் நிறைவேற்ற முடியாது.  தூரப்பயணத்திற்கு இஸ்லாம் மஹ்ரமி ஒருவருடன்தான் தனது பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்று கண்டிப்பாகக் கூறியுள்ளது. இதனை நன்கு உணர்ந்த றியால் அஸ்ஸெய்லானி (சாதிக் ஹாஜியார்), அப்பெண் தனதுகணவருடன் உம்ரா பயணத்தைத் தொடர்வதற்கான அனைத்து செலவுகளையும் தான் பொறுப்பேற்பதாகக் குறிப்பிட்டு, இந்நிகழ்வில்கணவன் – மனைவி இரண்டு பேரும் சேர்ந்து ஒன்றாக  உம்ரா செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது,

எமது நாடு பௌத்த நாடு. எனவே பௌத்த நாட்டில் வாழும் நாங்கள் குறிப்பாக எங்கள் உலமாக்கள் தமது சொற்பொழிவுகளை (பயான்) சிங்கள மொழியில் நிகழ்த்த வேண்டும். எமது பயான்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் போய் சேராமல் சிங்கள மக்களுக்கும் இஸ்லாம்என்றால் என்ன? இஸ்லாம் மாற்று மதங்களுக்கு எவ்வாறு கௌரவம் கொடுக்கின்றது என்பது பற்றி நாம் சிங்கள மொழியிலான பயான்கள்மூலமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அப்போதுதான் எமது இஸ்லாம் மார்க்கம் பற்றிய தெளிவு மாற்று மதத்தவருக்கு ஏற்படும். இதனால் வீண் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

எமது நாட்டில் இஸ்லாம் பற்றிய தெளிவின்மையால்தான் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே அதனை உலமாக்கள் மாற்றுமதத்தவர்களுக்கு விளங்கும் மொழிகளில் தங்களது பயானை செய்வதன் மூலம் இஸ்லாம் மதத்தை மாற்று மதத்தவருக்குப்புரியவைக்கலாம்.

அத்தோடு, நவமணி பத்திரிகை மூலமாக வழங்கப்படும் பரிசு கொஞ்சமாக மட்டுப்படுத்தப்படாமல் ஏராளமானவர்களுக்கு போய்ச் சேரவேண்டும். மக்கள் நன்றாகப் படித்து அதன் மூலமாக ஏராளமான மக்கள் பிரயோசனங்களைப் பெறவேண்டும். அதற்காக வேண்டி நான்எதிர்வரும் ஆண்டில் இடம்பெறும் ரமழான் பரிசுப் போட்டியில் 20 போட்டியாளர்களுக்கு வழங்குகின்ற ஆறுதல் பரிசினைபொறுப்பேற்கிறேன்.

குர் – ஆன் ஓதுவது சிலபேருக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. அந்தப் பிரச்சினை சிறியவர்களுக்கும் இருக்கின்றது.  பெரியவர்களுக்கும்இருக்கின்றது. எனவே அதனை சரிசெய்வதற்காக நாம் மௌலவிமார்களோடு இணைந்து அதற்கான பல வேலைத்திட்டங்களைமுன்னெடுக்க ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *