• Mon. Oct 13th, 2025

ஒரே பார்வையில், புதிய அமைச்சர்களின் விபரம்

Byadmin

May 1, 2018

(ஒரே பார்வையில், புதிய அமைச்சர்களின் விபரம்)

புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு,
லக்‌ஷ்மன் கிரியெல்ல – அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
சரத் அமுனுகம – விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய அமைச்சர்
எஸ். பி. நாவின்ன – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர்
மஹிந்த அமரவீர – விவசாயத்துறை அமைச்சர்
துமிந்த திசாநாயக்க – நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
பி. ஹெரிசன் – சமூக வலுவூட்டல் அமைச்சர்
கபீர் ஹாஷிம் – அதிவேக வீதி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர்
ரஞ்சித் மத்தும பண்டார – பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்
தலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
பைஸர் முஸ்தபா – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர்
விஜித விஜயமுனி சொய்சா – கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்
டி.எம் சுவாமிநாதன் – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர்
சாகல ரத்னாயக்க – திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
மனோ கணேசன் – தேசிய கலந்துரையாடல், நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்
தயா கமகே – சமூக நலம் மற்றும் ஆரம்ப தொழிற்முயற்சி அமைச்சர்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா – நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்
ரவீந்திர சமரவீர – தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்
விஜேதாஸ ராஜபக்ச – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *